×

கொடைக்கானலில் கலெக்டர் ஆய்வு

கொடைக்கானல், ஏப். 16:திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் கொடைக்கானல் நகர் பகுதியில் கோடை சீசன் காலங்களில் ஏற்படும் வாகன நெரிசல்களை சமாளிப்பது பற்றி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் ஆய்வு செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்புக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். கொடைக்கானல் ஏரி சாலை முழுவதும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மே மாதம் முடிந்தவுடன் தொடர்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாலை வேலையில் கூடுதலான நேரம் பூங்கா திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் வாகன நெரிசல் ஏற்படும் இடங்களில் வாகன நிறுத்தம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் ஆய்வு செய்து மேற்கொள்ளப்படும். சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

The post கொடைக்கானலில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul District ,Governor ,Vishakan ,Kodaikanal Nagar ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...