×

கேனிக்கரை வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம்

 

பொன்னமராவதி, மே 5: பொன்னமராவதி அருகே ஆலவயல் சின்னப்பிச்சன்பட்டியில் கேனிக்கரை வேல்முருகன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலவயல் சின்னப்பிச்சன்பட்டியில் கேனிக்கரை வேல் முருகன் கோயில் முன்பு சிறப்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலவயல் விக்னேஸ் சிவாச்சாரியார் தலைமையில் வேல் முருகனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. இதில் சின்னப்பிச்சன்பட்டி மற்றும் ஆலவயல் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post கேனிக்கரை வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kenikarai Velmurugan Temple ,Kumbabishekam ,Ponnamaravathi ,Kenikarai ,Velmurugan Temple ,Kumbabishekam ceremony ,Alavayal Chinnapichanpatti ,Alavayal Chinnapichanpatti, Pudukkottai district ,Alavayal… ,Kenikarai Velmurugan Temple Kumbabishekam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...