×

கூத்தாநல்லூர் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் விண்ணப்பிக்க முதல்வர் அறிவுறுத்தல்

மன்னார்குடி, ஜூன் 25: கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலி யாக உள்ள இடங்களுக்கு மாணவி களிடமிருந்து சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப் படுவதாக கல்லூரி பொ.முதல்வர் முனைவர் வாசு தேவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2022- 2023 கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2025- 2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை கடந்த 29.05.2025 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கல்லூரியில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் சில இடங்கள் காலியாக உள் ளன. பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி கணினி அறிவியல் மற்றும் பி.காம். இதுவரை விண்ணப்பிக்காத மாணவிகள் கல்லூரி க்கு நேரில் வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம் என அறிவிக்கப்படு கிறது.

மாணவிகள் சேர்க்கைக்கு வரும் பொழுது கீழ்க்கண்ட ஆவணங்களின் அசல் மற்றும் 3 நகல்கள் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, வருமானச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), வங்கி கணக்கு புத்த கம் முதல் பக்கம், மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஏற்கனவே விண்ணப்பித்த மாணவிகள் மேற்கண்ட ஆவணங் களோடு இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலையும் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு கூத்தாநல்லூர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொ. முதல்வர் முனைவர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

The post கூத்தாநல்லூர் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் விண்ணப்பிக்க முதல்வர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Koothanallur Government Women's College ,Mannargudi ,Koothanallur Government Women's Arts and Science College ,Vice-Chancellor ,Dr. ,Vasu Devan ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...