- குடலூர் நகராட்சி மன்றத்
- கூடலூர்
- குடலூர் மாநகராட்சி
- பத்மாவதி லோகந்தூரை
- கீழ் முகாம் நீர்ப்பாசன
- தின மலர்
கூடலூர், ஜூலை 17: கூடலூர் நகராட்சி நகர்மன்ற கூட்டம் தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில, ஒப்பந்த காலம் நீட்டிப்பு குறித்தும்,லோயர் கேம்ப் நீரேற்று நிலையத்தில் இருக்கும் மின் மோட்டார்களை இயக்குவதற்கும், குளோரின் அளவினை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ள செலவினம், நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி, திட்ட பணிகளுக்கான பராமரிப்புக்காக ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அதற்கான மதிப்பீட்டுத் தொகையை மன்றத்தின் முன் வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
நகராட்சி 2வது வார்டு எல்லை தெரு, 6வது வார்டு கொத்தனார் தெரு ஆகிய இடங்களை புதிய சிமெண்ட் சாலை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.புதிய பேருந்து நிலையத்தில் இலவச சிறுநீர் கழிவறை அமைப்பதற்கான தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மேலாளர் வெங்கடேசன், தொழில்நுட்ப உதவியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post கூடலூர் நகர்மன்ற கூட்டம் appeared first on Dinakaran.
