×

கூடலூர் அருகே நள்ளிரவில் வீட்டின் மீது தென்னை மரத்தை சாய்த்த யானைகள் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

 

கூடலூர், ஜூலை 18: கூடலூர் அருகே வீட்டின் மீது தென்னை மரத்தை காட்டு யானைகள் சாய்த்தன. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டுயானை, கரடி, காட்டுமாடு ஆகியவற்றை உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அள்ளூர் வயல் பகுதியை ஒட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளன.

நள்ளிரவில் பழங்குடியினர் குடியிருப்பில் வசிக்கும் ராஜேஷ் என்பவரது வீட்டை ஒட்டி இருந்த தென்னை மரத்தை யானைகள் சாய்த்தன. இதில் தென்னை மரம் வீட்டின் மீது விழுந்தது. வீட்டினுள் ராஜேஷ், காசி, குட்டன் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் ஆகியோர் இருந்துள்ளனர். மரம் விழுந்ததில் முன்புறக்கூரை மற்றும் சுவர் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்தவர்கள் உயிர்தப்பினர். அப்பகுதிவாசிகள் சத்தமிட்டு காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி உள்ளனர். ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலமுலா அரசு பள்ளியை ஒட்டி நேற்று இரவு ஒற்றைக்காட்டு யானை நடமாடியுள்ளது. இந்த யானை இப்பகுதி வழியாக வந்த சிவகுமார் என்பவரது காய்கறி வாகனத்தையும் விரட்டி உள்ளது. கனமழை மற்றும் மேகமூட்டம் காரணமாக கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது.

 

The post கூடலூர் அருகே நள்ளிரவில் வீட்டின் மீது தென்னை மரத்தை சாய்த்த யானைகள் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Cudalur ,Nilgiris district ,Gudalur forest ,Dinakaran ,
× RELATED 2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா