×

கூடலூரில் ‘என் மண் என் தேசம்’ நிகழ்ச்சி

கூடலூர், ஆக.17: கூடலூர் நகராட்சியில் ‘என் மண் என் தேசம்’ திட்ட நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் மரம் நடுதல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் போன்ற பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் கூடலூர் ஆர்டிஓ குதுரத்துல்லா, நகர்மன்ற தலைவர் பரிமளா, ஆணையர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ், மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், சுய உதவிக்குழுவினர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

The post கூடலூரில் ‘என் மண் என் தேசம்’ நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kudalur Municipality ,
× RELATED புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்