×

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி பலியான குடும்பத்திற்கு இழப்பீடு

பந்தலூர், ஜூன் 19: பந்தலூர் அருகே பிதர்காடு பெண்ணை பகுதியில் காட்டு யானை தாக்கி பலியான குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கூடலூர் வனக்கோட்டம் பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பெண்ணை செப்போடு பகுதியை சேர்ந்த சென்னா (74), நேற்று, முன்தினம் இரவு அருகே உள்ள கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது காட்டு யானை அவரை தாக்கியது. இதில், படுகாயம் அடைந்த சென்னா பரிதாபமாக உயிரிழந்தார். மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா, ஏடிஎஸ்பி சௌந்தராஜன், டிஎஸ்பி சரவணன் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, திமுக ஒன்றிய செயலாளர் சுஜேஷ் மற்றும் பயிற்சி உதவி வனபாதுகாவலர் அரவிந்த், ரேஞ்சர்கள் ரவி, சஞ்சீவி, சுரேஷ், கனேஷ், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் யானை தாக்கி பலியானவரின் உடலுக்கு மாலை அனிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவரது மகன் சந்திரனிடம் முதல் கட்ட இழப்பீடு தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கினர். மீதமுள்ள ரூ.9.50 லட்சம் காசோலையாக குடும்பத்தினரிடம் வழங்கப்படும். என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி பலியான குடும்பத்திற்கு இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Bidarkadu Penani ,Nilgiris district ,Kudalur Vanakottam ,Senna ,Seppodu ,Pidarkadu ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பருவ மழை துவக்கம்...