குலசேகரம், ஏப்.22: குலசேகரம் எஸ்.ஐ ஜெஸ்டன் தலைமையிலான போலீசார் ஈஞ்சகோடு மல்லிகுளம் கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் பைக்குடன் நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரிடம் சோதனை செய்தனர். அப்போது சுமார் 30 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் குலசேகரம் அருகே பொன்மனை ஈஞ்சகோடு பனவிளையை சேர்ந்த சேகர் மகன் ஆடின் டேனியல் (21) என்பதும், அவர் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆடின் டேனியலை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
The post குலசேகரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்க கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.
