×

குலசேகரபுரம் கிராமத்தில் மறுநில அளவை பணி கலெக்டர் வேண்டுகோள்

நாகர்கோவில், மே 20: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக, மறுநில அளவை அலுவலகத்திலிருந்து மே 12ம் தேதி முதல் குலசேகரபுரம் கிராமத்தில் மறுநில அளவை பணி நடைபெற்று வருகிறது. தங்களது கிராமத்தில், அளவைப்பணி மேற்கொள்ள வரும் நில அளவர்களுக்கு தேவையான ஆவணங்கள் வழங்கியும், எந்த ஒரு இடையூறும் ஏற்படா வண்ணம், மறுநில அளவை பணி சுணக்கமில்லாமல் முழுமை பெற ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குலசேகரபுரம் கிராமத்தில் மறுநில அளவை பணி கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Collector ,Kulasekarapuram ,Nagercoil ,Kumari District ,Azhugumeena ,Kanyakumari District Collector's Office Complex ,Re-land Survey Office ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...