×

குரூப் பி, சி பிரிவில் விண்ணப்பிக்க 25ம் தேதி தஞ்சையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஜூன் 24: ஸ்டாப் செலக்சன் கமிஷனானது தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தர நிலை தேர்வு வாயிலாக ஒன்றிய அரசில் குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பிரிவில் உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி போன்ற பணி காலியிடங்கள் உட்பட 14582 காலி பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பை < https://ssc.nic.in/ > என்ற இணையதளத்தில் எழுத்துத்தேர்வு வாயிலாக நிரப்ப வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தகுதியுடைய இளைஞர்கள் 04.07.2025 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். கணினி வழியாக முதல் கட்ட தேர்வானது ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு குறித்த முழு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.

எனவே, மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்காக தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக வருகின்ற 25.06.2025 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் 04362 237037 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வதோடு, கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post குரூப் பி, சி பிரிவில் விண்ணப்பிக்க 25ம் தேதி தஞ்சையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Staff Selection Commission ,Union Government ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...