×

கும்பகோணம் மாரியம்மன் கோயில் பால்குட விழா

கும்பகோணம், மே.26: கும்பகோணம் அப்புக்குட்டிதெருவில் அமைந்துள்ள ஆனந்த மாரியம்மன் கோயிலில் வைகாசி மாதம் ஆண்டு பால்குட கோடாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும்.
அதுபோலவே இவ்வாண்டும் விழா 72ம் ஆண்டாக கடந்த மே 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் மூலவர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம், சந்தன காப்பு, ஆண்டாள் அலங்காரம், காய்கனி அலங்காரம், குங்கும அலங்காரம், பச்சையம்மன் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் 20ம் ஆண்டாக நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சிறப்பு திருவிளக்கு பூஜை வீதியுலா நடைபெற்றது. அப்போது கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் இருந்து திரளான பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தி கேரள செண்ட மேளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக திருக்கோயிலுக்கு வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

The post கும்பகோணம் மாரியம்மன் கோயில் பால்குட விழா appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Mariamman Temple Paalkuta Festival ,Kumbakonam ,Paalkuta Kodabishekam festival ,Vaikasi ,Ananda Mariamman Temple ,Appukutty Road, Kumbakonam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...