×

கும்பகோணம் அருகே மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்திட வேண்டும்

கும்பகோணம், ஜூன்.6: கும்பகோணம்-தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இந்த சாலையில் பாபநாசம் திருப்பாலைத்துறையிலிருந்து 108 சிவாலயம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகம். இந்த சாலை கடந்த கும்பகோணம் மகாமகத்திற்கு முன்னர் போடப்பட்டது. அதன் பின்னர் இந்த சாலையில் பேட்ச் ஒர்க் மட்டுமே நடந்தது. சாலையோரம் மழைநீர் வடிகாலுடன் சாலைப்பணி நடைபெற்றது. பாபநாசம், திருப்பாலைத்துறை மெயின் சாலையோரம் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் பணி இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. மேலும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் சாலை ஓரமாகவே கிடக்கிறது.

இதனால் பாபநாசம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மெயின் சாலையில் திருப்பம் அருகே உள்ள பள்ளத்தை கவனிக்காவிட்டால், அதில் விழ நேரிடும். மழை நீர் வடிகால் பணி முடிவடையாததால் பாதிக்கப்படுவது பாபநாசம் பகுதி பொதுமக்கள் தான். மழை நீர் வடிகால் பணியை விரைந்து முடித்திட பாபநாசம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால், பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயமுள்ளது. எனவே மழை நீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க பாபநாசம் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கும்பகோணம் அருகே மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்திட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Thanjavur ,Tamil Nadu ,Papanasam, Thanjavur district ,Papanasam Thiruppalaithurai ,108 Sivalayam.… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...