×

கும்பகோணம் அருகே கோடைகால தண்ணீர்பந்தல் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

 

கும்பகோணம், மே.5: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம் கடைவீதியில் பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பேரூர் செயலாளர் ஜெப்ருதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் உள்ளூர் கணேசன் மற்றும் சுதாகர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் கமலா செல்வமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, நீர் மோர்,குளிர் பானம் ஆகியவற்றைபொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சோழபுரம் பேரூர் திமுக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், பகுதி செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கும்பகோணம் அருகே கோடைகால தண்ணீர்பந்தல் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Kumbakonam ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Perur DMK ,Cholapuram Kadayee ,Thanjavur ,Perur ,Jebrudeen ,Ganesan… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...