×

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு 3ம் கட்ட கலந்தாய்வு இன்று, 11, 12ம் தேதி 3 நாட்கள் நடக்கிறது

கும்பகோணம், ஜூலை 8: கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) 2024-2025ம் ஆண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜூலை 8ம் தேதி) ஜூலை 11 மற்றும் 12ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்த கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) 2024-2025ம் ஆண்டிற்கான முதலாமாண்டு இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையின் மூன்றாம் கட்ட கலந்தாய்வு இன்று (8ம் தேதி) மற்றும் 11ம் தேதி, 12ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு 199 லிருந்து 142 கட் ஆஃப் மதிப்பெண் வரை பெற்று இக்கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். 11 மற்றும் 12ம் தேதி ஆகிய இரு நாட்களும் காலை 9 மணிக்கு கடந்த 3 முதல் 5ம் தேதி வரை இக்கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளும், ஏற்கெனவே இக்கல்லூரிக்கு விண்ணப்பித்து சேர்க்கை பெறாத அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் மாதவி அறிவித்துள்ளார்.

 

The post கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு 3ம் கட்ட கலந்தாய்வு இன்று, 11, 12ம் தேதி 3 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Government College of Arts ,Kumbakonam ,Autonomous ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...