×

கும்பகோணத்தில் இஸ்லாமிய மகளிர் அமைப்பு கருத்தரங்கம்

 

கும்பகோணம், ஜூலை 5: கும்பகோணத்தில் இஸ்லாமிய மகளிர் அமைப்பு சார்பில்மகளிர் கருத்தரங்கம். கும்பகோணம்அல் அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இஸ்லாமிக் சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் மகளிருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கிஸ்வா மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஷாகிதா பானு முகம்மது ஜியாவுத்தீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியை பாத்திமா சபரிமாலா கலந்து கொண்டு நபிகளார் அறிவுறுத்திய பெண்ணியம் சார்பில் கருத்தரங்கத்தில் பேசினார். முன்னதாக பாத்திமா சபரிமாலா சமுதாய நட்சத்திரம் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

The post கும்பகோணத்தில் இஸ்லாமிய மகளிர் அமைப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Islamic Women's Organization Seminar ,Kumbakonam ,Islamic Women's Organization ,Al Amin Matriculation Higher Secondary School ,Islamic Social Welfare Association ,Kiswa ,Women ,Coordinator ,Shahida Banu Mohammed… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...