×

குமரி முழுவதும் காணும் பொங்கல் கொண்டாட்டம் சிறுவர்கள் சிறுவீட்டு பொங்கல் வைத்து மகிழ்ச்சி

நாகர்கோவில், ஜன. 18: குமரி முழுவதும் காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் சிறுவீட்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. சூரிய பகவனுக்கு மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் மாட்டு பொங்கல் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்று காணும் ெபாங்கல் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலா ஸ்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கன்னியாகுமரியில் நேற்று அதிகாலையிலேயே சூரிய உதயத்தை காண ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர். இதுபோல் ெசாத்தவிளை, சங்குதுறை பிச், லெமூர்பீச், வட்டக்கோட்டை முட்டம், குளச்சல் உள்பட பல்வேறு கடற்கரைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்து அழகை ரசித்தனர். திற்பரப்பு அருவியல் குளிப்பதற்காக குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு சென்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மாத்தூர் தொட்டி பாலம் பகுதியிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காணும் பொங்கலையொட்டி நாகர்கோவில் மாநகர பகுதியில் சிறுவர்கள் ஒன்றிணைந்து சிறுவீட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். பொங்கல் அன்று இறைவனுக்கு படைப்பதுபோன்று சிறுவர்கள் சிறுவீட்டு பொங்கலை சிறப்பாக நடத்தினர். காணும் பொங்கலையொடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post குமரி முழுவதும் காணும் பொங்கல் கொண்டாட்டம் சிறுவர்கள் சிறுவீட்டு பொங்கல் வைத்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pongal Pongal ,Kumari ,Nagerville ,Pongal ,festival ,
× RELATED குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார...