×

குடும்ப தகராறு அண்ணியை கல்லால் தாக்கியவர் கைது

 

திருச்சி, ஜூலை 7: திருச்சியில் அண்ணன் மனைவியை செங்கல்லால் தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி திருவளர்சோலை கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேந்திர பாபு மனைவி வசுமதி (34). சுரேந்திர பாபுவின் தம்பி ராமன் (30). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வசுமதியை எப்போதும் திட்டி சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஜூன் 30 அன்று வசுமதியின் மகளை திட்டியுள்ளார். இதுகுறித்து ராமனிடம் வசுமதி கேள்வி கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ராமன் உடைந்த செங்கல்லை எடுத்து அடித்ததில் வசுமதியின் மண்டை உடைந்தது. மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த வசுமதி ரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியவர், ரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், ராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post குடும்ப தகராறு அண்ணியை கல்லால் தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Surendra Babu ,Vasumathi ,Thiruvalarcholai ,Keezhattheru ,Raman ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்