×

குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி தென்காசி நகராட்சி அலுவலகத்தில் கீழப்புலியூர் நகர பாஜவினர் தர்ணா

தென்காசி,ஜூன் 12: தென்காசி நகராட்சி கீழப்புலியூர் நகர பாஜவினர் குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி நேற்று நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவருமான கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் மந்திரமூர்த்தி, நகர தலைவர் சங்கர சுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் லட்சுமண பெருமாள், நகர துணை தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் வெங்கடேஷ், நாராயணன், பாஜ பொறுப்பாளர்கள் கணேசன், சேது, ஆன்மீக பிரிவு பொறுப்பாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

The post குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி தென்காசி நகராட்சி அலுவலகத்தில் கீழப்புலியூர் நகர பாஜவினர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Keelappuliyur city BJP ,Tenkasi municipality ,Tenkasi ,Karuppasamy ,District ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...