×

கீழ்வேளூர் வேளாண் கல்லூரி பணி அனுபவத்திட்ட கண்காட்சி விழா

கீழ்வேளூர், மே 20: வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் வேளொண்பணி அனுபவத்திட்ட கண்காட்சி நடைபெற்றது. கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் வேளாண் மாணவர்களுக்கு கிராமப்புற விவசாய பணி அனுபவத்திட்டத்திற்காக 65நாட்கள் வேளாண் மாணவர்கள் 6 குழுக்களாக பிரிந்து கிராமப்புற அனுபவத்தை பெறவும், நம்பிக்கையை அளிக்கவும், நிஜ வாழ்க்கை சூழ்நிலைகள் பற்றியும், குறிப்பாக விவசாயிகள் மற்றும் விவசாயிகளுடன் தொடர்பில் இருக்கும்போது பண்ணையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் திறன்களை மாணவர்கள் இந்த அனுபவத்திட்டத்தின் மூலம் தெரிந்து கொண்டனர்.

இதன் நிறைவாக கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திட்ட கண்காட்சியை கிழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இணைப்பேராசிரியர் கமல்குமரன் வரவேற்றார். விழாவில் நாகப்பட்டினம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது சாதிக், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கண்ணன், ரகு மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்புமுத்து ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். வேளாண் கல்லூரி இணைப்பேராசிரியர் சக்திவேல் கிராமப்புற வேளாண் அனுபவ திட்டத்தை பற்றி பேசினார்.

கண்காட்சியில் காளான் வளர்ப்பு மாதிரி, ஒருங்கிணைந்த பண்ணைய முறை மாதிரி, தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகள், பயோடைனமிக் விவசாயம், தேனீ வளர்ப்பு மாதிரி, பாரம்பரிய நெல் ரகங்கள் போன்ற பல மாதிரிகளை மாணவர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். விவசாயிகளுக்கு அதை விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் உஷாராணி மற்றும் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கீழ்வேளூர் வேளாண் கல்லூரி பணி அனுபவத்திட்ட கண்காட்சி விழா appeared first on Dinakaran.

Tags : Kilvellur Agricultural College Work Experience Exhibition ,Kilvellur ,Velonpani Experience ,Agricultural College ,Kilvellur Agricultural College ,Research Institute ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...