×

கீழக்கரையில் கெட்டுப்போன மீன்கள் அழிப்பு: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை

 

கீழக்கரை, மே 10: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோன் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில், கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து கீழக்கரையில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, வேதிப் பொருள்கள் ஏதும் கலப்படம் செய்ய கூடாது, அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் உரிமம் பெற்று இருக்க வேண்டும், மீன்கள் விற்பனை செய்யும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது கெட்டுப்போன பழைய மீன்கள், சுமார் 8.2 கிலோ அழிக்கப்பட்டு கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், கெட்டுப்போன மீன்களை, மீண்டும் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

The post கீழக்கரையில் கெட்டுப்போன மீன்கள் அழிப்பு: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Keezhakarai ,Food Safety Department ,Ramanathapuram ,District Collector ,Simranjeet Kalon ,District Food Safety Department ,Officer ,Dr. ,Vijayakumar ,Food ,Safety ,Jayaraj ,Fisheries Department ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...