×
Saravana Stores

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகள்-பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் முகாமிட்டுள்ள குரங்குகளால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே மேகலசின்னம்பள்ளி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தற்போது மூடியுள்ள நிலையில் ஏராளமான குரங்குகள் பள்ளியில் முகாமிட்டு, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால், குரங்குகள் இங்கேயே தங்கி பள்ளியிலுள்ள மரக்கிளைகளை உடைத்தும், கட்டிடத்தை அசுத்தப்படுத்தியும் வருகின்றன. ஊருக்குள் கூட்டமாக வரும் குரங்குகள், வீடுகளில் உள்ள சமையல் பொருட்களை சேதப்படுத்தியும், தண்ணீர் பைப்புகளை உடைத்தும் விடுகின்றன. மேலும், அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து காய்கறி செடிகளையும், தேங்காய்களையும் பறித்து நாசம் செய்து வருகிறது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், பள்ளியில் முகாமிட்டுள்ள குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்….

The post கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகள்-பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Maharajakadai ,
× RELATED ஓசூர் பகுதியில் தொடர் மழையால் சாமந்திப்பூ விலை வீழ்ச்சி