சென்னை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தையில் விற்கப்படுகிறது. பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் இவற்றை வாங்கிப் பயனடைய வேண்டும் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மகளிர் உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இயற்கை சந்தையில் இன்று விற்பனை appeared first on Dinakaran.