×

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு செங்கோட்டையில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

செங்கோட்டை,ஏப்.27: காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே இந்து முன்னணி சார்பில் 28 மோட்ச தீபம் ஏற்றி வைத்து தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் மாசானம் தலைமை வகித்தார். பாஜ நகர தலைவர் முத்துமாரியப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகன், சீனிவாசன், ராம்குமார், சிவ சுரேஷ், மாரி செல்வம், ஆறுமுகம், கவுன்சிலர்கள் வேம்பு ராஜ், செண்பகராஜன், முருகேசன், தங்கப்பாண்டி, மாரியப்பன், முருகன், முன்னாள் நகர பொது செயலாளர் பேச்சிமுத்து, வக்கீல் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு செங்கோட்டையில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Kashmir attack ,Moksha ,Deepam ,Sengottai ,Sengottai Taluka Office ,Deepams ,Hindu Munnani ,Nagar ,Masanam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...