×

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை, பிப். 27: வடமதுரை அருகே தாமரைப்பாடி இந்திரா காலனியை சேர்ந்தவர் வைர விநாயகன் (23). கட்டிட தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் மேனகா (21). இவர் பி.காம் படித்துவிட்டு திண்டுக்கல் தனியார் மையத்தில் தட்டச்சு பயின்று வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மேனகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி பழநி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் மேனகாவை காணவில்லை என அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் போலீசார் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் எனக்கூறி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

The post காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Vaira Vinayakan ,Thamaraipadi Indira Colony ,Menaka ,B.Com ,Dindigul ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...