×

காளையார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல்

காளையார்கோவில், நவ. 30: காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள அதப்படக்கி மற்றும் பொட்டகவயல் விவசாயிகளுக்கு, நுண்ணூட்ட உரக்கலவை அடங்கிய 150 உரப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பிரதான் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் இருந்து நெற்பயிர்களுக்கான நுண்ணூட்ட உரக்கலவை பெறப்பட்டு, கிராம விவசாயிகள் மற்றும் கண்மாய் விவசாய சங்க பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதான் தொண்டு நிறுவன திட்ட அலுவலர்கள் கார்த்திக்குமார், ஸ்ரீதர், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். காளையார்கோவில் திட்ட அலுவலர் வெங்கடேஷ், நுண்ணூட்ட உரக்கலவை பயன்கள் மற்றும் இடும் முறைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

The post காளையார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kalayarkovil ,Athapadaki ,Potagawayal ,Kalayarkovil Union ,Pradhan Charities ,Tamil Nadu University of Agriculture, Coimbatore, Soil Science and Agrochemistry ,
× RELATED விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல்