×

விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல்

 

சிவகங்கை, டிச.11: சிவகங்கை அருகே பொட்டகவயல் கிராமத்தில் பிரதான் கண்மாய் மேம்பாட்டு திட்டத்தில் நுண்ணூட்ட உரக்கலவை உரப்பைகள் வழங்கினர். சிவகங்கை அருகே அதப்படக்கி, பொட்டகவயல் ஆகிய கிராமங்களில் பிரதான் தொண்டு நிறுவன உதவியுடன் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் சார்பில் நெல் பயிர்களுக்கான நுண்ணூட்ட உரக்கலவை பெறப்பட்டு கிராம விவசாயிகள் மற்றும் கண்மாய் விவசாய சங்க பொறுப்பாளர்களுக்கு உரப்பைகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரதான் தொண்டு நிறுவன திட்ட அலுவலர்கள் கார்த்திக் குமார், ஸ்ரீதர், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். காளையார்கோவில் திட்ட அலுவலர் வெங்கடேஷ் நுண்ணூட்ட உரக்கலவை பயன்கள் மற்றும் இடும் முறைகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Potagawayal ,Pradhan ,Project ,Tamil Nadu Agricultural University ,Coimbatore ,Pradhan Charitable Organization ,Athapadakki ,
× RELATED சிவகங்கையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்