×

காளியண்ண கவுண்டருக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

 

திருச்செங்கோடு, மே 29: திருச்செங்கோட்டின் முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய அரசியல் நிர்ணய சபை குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற மேலவை உறுப்பினருமான டி.எம்.காளியண்ண கவுண்டர் மறைந்து, 5 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, திருச்செங்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் தலைமையில், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, மேற்கு நகர திமுக பொறுப்பாளர் நடேசன், மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, கிழக்கு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர்முருகையன்,

முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தாண்டவன், கொமதேக மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வகுமார், தமாகா மாவட்ட தலைவர் செல்வகுமார், பாஜ நிர்வாகிகள் பாலசுப்பிர மணியம், நாகராஜ், உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், உள்ளிட்டோர் காளியண்ண கவுண்டரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஸ்வரன் வரவேற்றார். மாதேஸ்வரன் எம்பி., பேசுகையில், ‘மறைந்த காளியண்ண கவுண்டரின் கனவு திட்டமான திருமணிமுத்தாறு – சரபங்கா – காவிரி ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்’ என்றார்.

The post காளியண்ண கவுண்டருக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Kaliyanna Gounder ,Thiruchengode ,T.M. ,Congress ,Constituent Assembly of India ,Legislative Assembly ,Parliament ,Legislative Council ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...