×

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் விளாம்பாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கலெக்டரின் உத்தரவின்பேரில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு துணைத் தலைவர் எம்.பர்க்கத்துல்லாகான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் உதவி இயக்குனர் கே.சரவணன், ஊராட்சித் தலைவர் பொன்மணி ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா ரமேஷ் சிறந்த கன்றுகள் மற்றும் சிறப்பாக கால்நடைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். முகாமில் உதவி மருத்துவர்கள் பொற்கொடி, கார்த்திகேய பிரபு, பிரேம்குமார், சாருண்ணி, ஆய்வாளர்கள் பாபு, உதவியாளர்கள் வெங்கடேசன், வேலு, குணா ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை, கருவூட்டல், ஆண்மை நீக்க சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை,  தடுப்பூசி ஆகிய பணிகளை மேற்கொண்டனர். இதில் துணைத் தலைவர், ஊராட்சி  செயலர், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்….

The post கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Awareness Camp ,Department of Animal Care ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்