×

கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

 

மூணாறு, ஜூலை 5: தொடுபுழா அருகே உள்ள முட்டம் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியதை பார்த்த டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கினர். அவர்கள் இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

 

The post கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Munnar ,Tamil Nadu ,Muttam ,Thodupuzha ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...