×

காரையூரில் இன்று வடமாடு மஞ்சுவிரட்டு

 

பொன்னமராவதி, மே 23: பொன்னமராவதி அருகே காரையூரில் இன்று வடமஞ்சுவிரட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் காரைக்கண்மாயில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வடமஞ்சுவிரட்டு போட்டி நடக்கிறது. இதையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெறும் விழாத்திடலில் முகூர்த்தக கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த வடமஞ்சுவிரட்டில் 14 காளைகள் மற்றும் 9 பேர் கொண்ட 14 குழு மாடுபிடிவீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர். மேலும் நாளை சுந்தரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

The post காரையூரில் இன்று வடமாடு மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.

Tags : Vadamadu Manjuvirattu competition ,Karaiyur ,Ponnamaravathi ,Mukurthakkal ,Karaiyur Karaikanmai ,Pudukkottai district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...