×

காமராஜ் பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

 

விருதுநகர், மே 3: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தை அண்ணா பல்கலைக்கழக அளவில் சிறந்து விளங்கும் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பாக தேர்வு செய்துள்ளது. மேலும் மாணவி அஸ்வினிலட்சுமியை சிறந்த தன்னார்வலராக தேர்வு செய்து கௌரவப்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் முன்னிலையில் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அமைப்பிற்கான விருதினை கல்லூரி முதல்வர் செந்தில் பிரபுவிடம் வழங்கினார். சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் செந்தில்பிரபு மற்றும் முதல்வர் செந்தில் பாராட்டினர்.

The post காமராஜ் பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kamaraj College of Engineering ,Minister ,Udayanidhi Stalin ,Virudhunagar ,Udhayanidhi ,Kamaraj Engineering College ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED காமராஜ் பொறியியல் கல்லூரியில் யோகா தின போட்டிகள்