×

காப்பீடு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு; ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,அக்.2: காப்பீடு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத்தலைவர்கள் வடிவேல், சுப்பிரமணியன், சந்திரசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ஜீவாராமன், குமார், மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் நாகைமாலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு காவிரியில் இருந்து போதிய நீர் கிடைக்காத காரணத்தால் பாதிக்கப்பப்ட விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணம் மற்றும் வேளாண்மை, வருவாய்த்துறை, புள்ளியியல் துறை காணக்கீடு செய்தும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 34 ஊராட்சிகளுக்கு மட்டுமே பயிர்காப்பீடு வழங்கியுள்ளதை கண்டிக்கிறோம். பயிர் காப்பீடு பதிவு செய்த அனைத்து ஊராட்சிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் வழங்குவதில் முறைகேடு செய்யும் ஒன்றிய அரசை கண்டிப்பது. கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் விவசாய கடனை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாய கடன் வழங்க வேண்டும். 100 நாள் வேலை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post காப்பீடு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு; ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Nagapattinam ,Tamil Nadu Farmers' Association ,Nagapattinam Tahsildar ,Union ,Vadivel ,Subramanian ,Chandrasekhar ,Jeevaraman, ,Kumar ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்