×

செல்போன் பறித்த ரவுடி கைது

திருச்சி, அக்.2: திருச்சியில் செல்போன் பறித்த வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
திருச்சி உறையூர் சின்ன சவுராஸ்டிரா தெருவை சேர்ந்தவர் சிங்காரம்(54). இவர் சிந்தாமணி பஜாரில் உள்ள டீக்கடை அருகே நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர், சிங்காரத்திடம் ஒருவருக்கு ேபான் செய்ய வேண்டும், அதனால் உங்களது செல்போனை தாருங்கள் என்றார்.

இதற்கு மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து கீழதேவதானத்தை சேர்ந்த ரவுடி அருண் (எ) அருண் பிரசாத்தை(36) கைது செய்தனர்.

The post செல்போன் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Singaram ,Chinna Saurastra Street, Varayur, Trichy ,Chintamani Bazaar ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...