×

2014 முதல் 2017ம் ஆண்டு வரை 2.4 லட்சம் கோடி வராக்கடன் ரத்து: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடெல்லி: ‘பொதுத்துறை வங்கிகள் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை  மொத்தம் ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 911 கோடி வராக்  கடன்களை ரத்து  செய்துள்ளன’ என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுத்துறை  வங்கிகள் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை ரத்து செய்த  வராக்கடன் எவ்வளவு என மத்திய அரசிடம் தகவல்  கேட்கப்பட்டிருந்தது. இதற்கு  மாநிலங்களவைில் ேநற்று முன்தினம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த  நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரதாப்  சுக்லா கூறியதாவது:
வராக்கடன்களை  தள்ளுபடி செய்வது வங்கிகள் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறை. இதன் மூலம்  இருப்பு நிலை அறிக்கை முடிக்கப்படுகிறது,  வரிச்சலுகையும் பெறப்படுகிறது.

 ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரப்படி கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017  செப்டம்பர் வரை ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து  911 கோடி வராக் கடன்களை பொதுத்  துறை வங்கிகள் ரத்து செய்துள்ளன. கடனை எளிதாக செலுத்தும் வகையில்  மாற்றி  அமைப்பதற்காகவும், வரி  ஆதாயத்துக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காவும்  வராக் கடன் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் ரத்து செய்யப்படும் கடன்களில்,  கடன்  வாங்கியோர் தொடர்ந்து கடனை செலுத்த வேண்டும். வசூலிக்கப்பட வேண்டிய  கடன்கள் எல்லாம் கடன் மீட்பு தீர்ப்பாயங்கள், ‘சர்பாசி’ சட்டம்  உட்பட  சட்டரீதியான முறையில் மீட்கப்பட்டு வருகின்றன. அதனால் கடன் தள்ளுபடியால்  கடன் வாங்கியவர்களுக்கு எந்த பலனும் இல்லை. ரிசர்வ்  வங்கி சட்டப்படி,  வங்கிகள் தாக்கல் செய்யும் கடன் விவரங்கள் எல்லாம் ரகசியமானவை. அவை  வெளியிடப்படுவதிலலை. இவ்வாறு அவர் கூறினார்.

மம்தா அதிர்ச்சி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘‘வாங்கிய கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்.  விவசாய கடனை தள்ளுபடி செய்ய  வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். அது பற்றி மத்திய அரசு கண்டு  கொள்ளவில்லை. ஆனால்,  பொதுத்துறை வங்கிகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2.41 லட்சம் கோடி வராக் கடனை தள்ளுபடி செய்துள்ளன என நாடாளுமன்றத்தில் அரசு   அறிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. கடன் வாங்கியவர்களின் விவரங்களை அறிவிக்க முடியாது என நாடாளுமன்றத்திலேயே அரசு கூறுகிறது’’  என்றார்.

Tags :
× RELATED அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை..!!