×

காங். ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஏப்.17: சிவகங்கை அரண்மனைவாசலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்தும், ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். நகர தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்பி கார்த்திக்சிதம்பரம் பேசினார். இதில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சோணை, காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகராஜன், வட்டார தலைவர்கள் மதியழகன், உடையார் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post காங். ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Sivaganga ,Sivaganga Palace Gate ,Enforcement Directorate ,Sonia Gandhi ,Rahul Gandhi ,National Herald ,Union government ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...