- காங்கிரஸ்
- ஊத்தங்கரை
- கோபிநாத்
- திமுக
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- மக்களவைத் தேர்தல்
- ஊத்தங்கரை
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
- குமரேசன்
- அம்பேத்கர்
- காமராஜ்
- தின மலர்
ஊத்தங்கரை, ஜூன் 7: நாடாமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி பெற்றார். இதையடுத்து ஊத்தங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன் தலைமையில், நான்கு முனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர், காமராஜர், ராஜிவ் காந்தி, அண்ணா, இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், வட்டார தலைவர் ரவி, திருமால், நகர தலைவர் விஜயகுமார், பூக்கடை மகி, திமுக நகர தலைவர் தணிகை குமரன், விசிக மாவட்ட செயலாளர் குபேந்திரன், காங்கிரஸ் மாநில துணை செயலாளர் ஆறுமுகம், இளையராஜா, மகேந்திரன், தமிழ்செல்வன், எத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post காங்கிரசார் கொண்டாட்டம் appeared first on Dinakaran.