- பிஷப்
- உலக விதவைகள் தினம்
- கசவந்திட்டை
- திருவட்டார்
- எம்ஐடி நிறுவனம்
- மார்த்தாண்டம் மறைமாவட்டம்
- எம்ஐடிகள்
- ரெவ்.
- ஜெரோம்
திருவட்டார்,ஜூலை 2: உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு மாநாடு கழுவன்திட்டையில் நடந்தது. மார்த்தாண்டம் மறைமாவட்ட சமூக பணி மையமான மிட்ஸ் நிறுவனம் சார்பில் இந்த மாநாடு நடந்தது. நிகழ்ச்சியை மிட்ஸ் இயக்குநர் அருட்தந்தை ஜெரோம் துவக்கி வைத்தார். கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்மல் மேரி, களப்பணியாளர் ஆனிலெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பில் வாழும் கைம்பெண்களுக்கு மிட்ஸ் நிறுவனம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், எந்த நிலையிலும் தைரியத்தை விட்டுவிடாமல் உழைத்து முன்னேற வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வோம் எனவும் ஆயர் பேசினார். தமிழக அரசு சார்பில் கைம்பெண்கள் மேம்பாட்டுத் துறை உருவாக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மினி நன்றி கூறினார். கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் பங்கேற்றனர்.
The post கழுவன்திட்டையில் உலக கைம்பெண்கள் தின சிறப்பு மாநாடு பிஷப் பங்கேற்பு appeared first on Dinakaran.
