×

கழிப்பிடம் கட்டி தர கோரி மனு

 

திண்டுக்கல், ஜூலை 23: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முருநெல்லிக்கோட்டை பகுதி மக்கள் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்ததாவது: திண்டுக்கல் அருகே சுள்ளெறும்பு கிராமம், முருநெல்லிக்கோட்டையில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு பெண்கள், குழந்தைகள், முதியோர் அனைவரும் ரோட்டோரங்களிலேயே திறந்தவெளி கழிப்பிடம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பொது கழிப்பறை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

The post கழிப்பிடம் கட்டி தர கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Murunellikottai ,Dindigul Collector ,Collector ,Poongodi ,Ammanuil ,Murunellikottai, Sullerumbu village ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...