×

கல்லணை திறப்பதற்கு முன் ஏ,பி,சி,டி பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி கலெக்டரிடம் மனு

 

தஞ்சாவூர், மே 27: கல்லணை திறப்பதற்கு முன்னதாக ஏபிசிடி பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணை திறப்பதற்கு முன்பாக ஏ , பி, சி, டி பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு காலதாமதப்படுத்தாமல் பெற்றுத் தர முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும். குறுவை நெல் சாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு கூட்டுறவு தொடக்க வேளாண் சங்கம் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post கல்லணை திறப்பதற்கு முன் ஏ,பி,சி,டி பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : ABCD ,Thanjavur ,Thanjavur District Collector ,Office ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...