×

கலைஞர் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் ரத்த தான முகாம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, ஜூன் 20: முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் காமராஜர் சாலையில் உள்ள மண்டபத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி நிர்வாகி சிவபாலன் உள்பட மொத்தம் 102 பேர் ரத்த தானம் செய்தனர். அரசு மருத்துவமனை ஊழியர்கள் ரத்தத்தை சேகரித்தனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், கவுன்சிலர்கள் சரவணன், ராஜேந்திரன், வட்ட செயலாளர்கள் மூக்கையா, சுப்பையா,மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், பகுதி விவசாய அணி அமைப்பாளர் பெரியநாயகம், தூத்துக்குடி பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் ரத்த தான முகாம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Geetha Jeevan ,Thoothukudi ,Chief Minister ,Kalaignar ,Thoothukudi City DMK ,Kamarajar Salai ,Minister of Social Welfare and Women's Rights ,North… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...