×

கலைஞர் பிறந்தநாள் விழா கோயில் அர்ச்சகர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஜெயங்கொண்டம், ஜூன் 4: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, இடையார் கிராமத்தில் அரியலூர் மாவட்ட திமுக சார்பில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான சா.சி.சிவசங்கர் கிராம கோயில் அர்ச்சகர் சங்கத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், திமுக சட்டதிட்ட திருத்தக் குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் தனசேகர் மற்றும் மாவட்ட, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாள் விழா கோயில் அர்ச்சகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Kalaignar ,Jayankondam ,Muthamizharrigan ,Dr. Kalaignar ,Ariyalur ,district ,DMK ,Minister for Transport ,and Electricity ,S.C. Sivashankar ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...