×

கலைஞர் பிறந்தநாளையொட்டி பெரியகுளத்தில் கிரிக்கெட் போட்டி: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

 

தேனி: பெரியகுளத்தில் கலைஞர் பிறந்தநாள் விழாவையொட்டி கிரிக்கெட் போட்டியை பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார் துவக்கி வைத்தார். பெரியகுளத்தில் உள்ள நியூ கிரவுண்டில் கலைஞர் பிறந்தநாள் விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளை நேற்று முன்தினம் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், பெரியகுளம் தொகுதி எம்எல்ஏவுமான கே.எஸ்.சரவணக்குமார் வீரர்களை அறிமுகம் செய்து வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

இதில், தென்கரை பேரூராட்சி சேர்மன் நாகராஜ், பெரியகுளம் நகர திமுக செயலாளர் முகமதுஇலியாஸ், தென்கரை பேரூர் திமுக செயலாளர் பாலமுருகன், தென்கரை பேரூராட்சி கவுன்சிலர் தேவராஜ், தேனி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாளையொட்டி பெரியகுளத்தில் கிரிக்கெட் போட்டி: எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Kalaignar ,MLA ,Theni ,Saravanakumar ,New Ground ,Periyakulam South Union… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...