×

கலைஞர் நூலகத்தில் படித்த 4பேர் அரசு தேர்வில் தேர்ச்சி

தர்மபுரி, ஜூன் 16: தர்மபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி அருகில், திமுக இளைஞரணி சார்பில் கருணாநிதி நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போட்டி தேர்வுக்கு படித்து அரசு, வங்கி பணிக்கு தேர்வு பெற்ற நவீன், முருகன், சத்தியபாமா, செல்வகணபதி ஆகியோருக்கு அவர்கள் படித்த நூலகத்திலேயே பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து அரசு, வங்கி பணிக்கு தேர்வானவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு வரவேற்றார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், டாக்டர் பிரபுராஜசேகர், மாது, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் மற்றும் அணிகளின் துணை ஒருங்கிணைப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூலகத்தில் படித்த 4பேர் அரசு தேர்வில் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kalaignar Library ,Dharmapuri ,Karunanidhi Library ,DMK ,Government Engineering College ,Pappireddipatti ,Dharmapuri West district ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...