×

கர்நாடக வியாபாரிகள் வராததால் குந்தாரப்பள்ளியில் ஆடு விற்பனை மந்தம்

வேப்பனஹள்ளி செப்30: கர்நாடக வியாபாரிகள் வராததால், குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடு விற்பனை டல் அடித்தது. காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க கூடாது என கர்நாடகா முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கர்நாடகாவில் தொழிற்சங்கங்கள் முழு பந்த் அறிவித்திருந்தனர். இதையொட்டி, கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார், கேஜிஎப் ஆகிய நகரங்களுக்கு, கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனஹள்ளி வழியாக இயக்கப்படும் பஸ்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. மேலும், வேப்பனஹள்ளிக்கு வரக்கூடிய கர்நாடக பஸ்களும் வராததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். வேப்பனஹள்ளி அருகே குந்தாரப்பள்ளியில், வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் சந்தை பிரசித்தம். இச்சந்தைக்கு கர்நாடக வியாபாரிகள் ஏராளமானோர் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். நேற்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக வியாபாரிகள் வராததால் ஆடு விற்பனை மந்தமாக நடைபெற்றது.

The post கர்நாடக வியாபாரிகள் வராததால் குந்தாரப்பள்ளியில் ஆடு விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Tags : Gundharapalli ,Veppanahalli ,Gundharappalli ,Karnataka ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்