×

கருணாநிதியின் 102வது பிறந்த நாள்: முதியோர் இல்லத்தில் மதிய உணவு

நாகப்பட்டினம், ஜூன் 4: மறைந்த முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக வர்த்தக அணி மற்றும் 27வது வார்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள நாம்கோ ஒருங்கிணைந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார். நகர செயலாளரும், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து, நகர துணை செயலாளர்களும், நகர்மன்ற உறுப்பினர்களுமான சித்ரா, திலகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கருணாநிதியின் 102வது பிறந்த நாள்: முதியோர் இல்லத்தில் மதிய உணவு appeared first on Dinakaran.

Tags : Karunanidhi ,Nagapattinam ,Chief Minister ,Namco Integrated ,Children ,and Elderly Home ,District Dimuka Trade Team ,27th Ward Dimuka ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...