×

கரியாப்பட்டினம் ஆனந்த் ஹெல்த் சென்டரில் இலவச இருதய மருத்துவ முகாம்

வேதாரண்யம், ஜூன் 23: வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் உள்ள ஆனந்த் ஹெல்த் சென்டரில் தஞ்சை அனு மருத்துவமனையோடு இணைந்து இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் முதன்மை இருதய மருத்துவர் சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு இருதயம் சம்பந்தபட்ட நோய்கள் வர காரணங்களும், அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் பற்றி பொ துமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.மேலும் முகாமில் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இசிஜி 300 பேர்களுக்கும், எக்கோ ஸ்கேன் 150 பேர்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இம்முகாமை ஆனந்த் ஹெல்த் சென்டர் தலைமை மருத்துவர் ஆனந்தன், பொது மற்றும் மகளிர் நல மருத்துவர் மாலதி ஆனந்தன், நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் உள்ளிட்ட மருத்துவனை ஊழியர்கள் செய்து இருந்தனர். முகாமில் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post கரியாப்பட்டினம் ஆனந்த் ஹெல்த் சென்டரில் இலவச இருதய மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Medical ,Kariyapattinam Anand Health Centre ,VEDARANYAM ,TANJAI ANU HOSPITAL ,ANAND HEALTH CENTRE ,KARIAPATTAN ,TALUGA ,Sivakumar ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...