×

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் 3 கிலோ வெள்ளி ஆபரணம் பக்தர் காணிக்கை

 

கன்னியாகுமரி, மே.30: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பக்தரான உல்லாஸ் ராகவன், சகுந்தலா பிரபாகரன் ஆகியோர் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 222 மதிப்புள்ள 2 கிலோ 920 கிராம் எடையுள்ள வெள்ளி ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

இதில் பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் அம்மாள் ஆகியோருக்கு அணிவிப்பதற்காக 2 வெள்ளிக்கிரீடம், 2 ஜோடி வெள்ளி கால்பாதம், 2 ஜோடி வெள்ளி காது ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வைத்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவி செயல் அலுவலர் பார்த்தசாரதியிடம் அவர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அலுவலர் லட்சுமிபதி, கோவில் அர்ச்சகர் சேஷாத்திரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் 3 கிலோ வெள்ளி ஆபரணம் பக்தர் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Tirupathi Venkadajalapathi Temple ,Kanniyakumari ,Venkatajalapathi Temple ,Thirumalai Tirupathi Devasthan ,Kanyakumari Vivekananda Kendra Beach Complex ,Ullas Raghavan ,Sakundala Prabhakaran ,Kerala State ,Thiruvananthapuram ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...