×

கந்தர்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுச்சாலையில் சோளார் ரிப்ளக்டர்கள் அமைக்க வேண்டும்

 

கந்தர்வகோட்டை, மே 8: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு தினசரி கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல பணிகளுக்கு பைக், கார், பேருந்துகளில் சென்று வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் கந்தர்வகோட்டை முதல் தஞ்சை வரை ஏராளமான சிறு பாலங்கள், சாலை வளைவுகள் உள்ளன. இதற்கான எந்த அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை சின்னங்கள் ஏதும் வைக்கப்படவில்லை. மேலும், பாதசாரிகள் குறுக்கிடும் பகுதி உள்ளிட்ட இடங்களில் தெர்மோஸ்டேடிக் பெயிண்டால் குறியீடுகள் வரையவும், இரவில் ஒளிரும் வகையில் சோளார் ரிப்ளக்டர்கள் பொருத்தப்பட வேண்டும். இதனால், இரவில் குறுகிய பாலகள், சாலை வளைவுகள் உள்ளிட்டவைகளைக் கண்டு வாகன ஓட்டிகள் செல்வர். இதனால், சாலை விபத்துக்களைத் தவிர்க்கலாம். எனவே, கந்தர்வக்கோட்டை- தஞ்சை சாலையில் உரிய அறிவிப்பு பலகைகள் வைத்தல், சோலார் ரிப்ளக்டர் அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post கந்தர்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுச்சாலையில் சோளார் ரிப்ளக்டர்கள் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kandarvakotta-Tanjai National Highway ,Kandarvakota ,Pudukkottai District ,Kandarvagota ,Thantai ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...