×
Saravana Stores

கட்சி வேறுபாடு இல்லாமல் பூட்டியே கிடக்கும் தேர்தல் பணிமனைகள்

கரூர், ஏப். 11: கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெறிச்சோடி கிடைக்கும் பணிமனைகளாக தெரிகிறது வெறும் கண்துடைப்பிற்காக மட்டுமே பணிமனைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் 19ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை ஒவ்வொரு தொகுதிக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் இருக்க வேண்டும். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர் ,மணப்பாறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் அடங்கும்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் 693730 ஆண் வாக்காளர்களும், 735970 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 90 உள்பட மொத்தம் 1429790 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 1495 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. குறிப்பாக களத்தில் நிற்கும் வேட்பாளர்களான காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தங்கவேல் ,பாஜ வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கருப்பையா ஆகியோர் உள்பட 54 பேர் போட்டியிடுகின்றனர். போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொரு தேர்தலை முன்னிட்டு கரூர் மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வார்டு க்கும் ஒரு பணிமனை திறந்து அதில் கட்சி நிர்வாகிகளையும் பொதுமக்களையும் ஒன்று சேர்த்து தினசரி காலை மாலை தங்கள் கூட்டணி கட்சி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பொதுமக்களும் வாக்கு கேட்டு வருவது வழக்கம். ஆனால் இம்முறை கரூர் நாடாளுமன்றத் தேர்தல் சற்று வித்தியாசமாக தெரிகிறது.

குறிப்பாக களத்தில் நிற்கும் நான்கு முன்னணி அரசியல் கட்சி வேட்பாளர்கள் கரூர் மாநகராட்சி பகுதியில் 4 இடத்தில் மட்டுமே பணிமனை அமைத்துள்ளனர். அவ்வாறு பணிமனை அமைத்துள்ள இடத்திலும் பொதுமக்கள் வந்து அமருவதற்கு இருக்கைகள் மட்டுமே உள்ளது .

உள்ளே மக்களோ கட்சியின் நிர்வாகிகள் யாரும் இருப்பதில்லை. பகல் மாலை இரவு 24 மணி நேரமும் அடைத்தே காணப்படுகிறது. அதேபோல் குழுவாக சேர்ந்து ஓட்டு கேட்டு வருவது முழுமையாக குறைத்துள்ளனர். சில இடத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறதா? இதற்கான அறிகுறியே இல்லாமல் மயான அமைதியாக காணப்படுகிறது. வழக்கமாக கூலிக்குச் செல்லும் தொழிலாளர்கள் பணியாளர்கள் குறிப்பாக 100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் தாங்கள் 100 நாள் வேலை நிறுத்திக்கொண்டு அதற்கு மாறாக தினசரி அரசியல் கட்சியோடு சேர்ந்து குறிப்பிட்ட ஒவ்வொரு கட்சிக்கு வாக்கு சேகரித்து கூடுதலாக பணம் சம்பாதித்து வந்தனர். இம்முறையும் அரசியல் கட்சியினர் தங்களை அழைப்பாளர்கள் தினசரி கூடுதலாக பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இன்னும் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருப்பதால் என்ன நடக்கிறது என்றே தெரியாதவாறு மக்கள் புலம்பி தள்ளுகின்றனர்.

தேர்தல் வரை வாக்கு சேகரிக்கும் பொது மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தாங்கள் விரும்பிய உணவுடன் மாலை சிறப்பு நீரும் வழங்கப்பட்டு வந்தது. இம்முறை அதற்கு மாறாக மிகவும் அமைதியாக தேர்தல் நடைபெற முக்கிய காரணம் தேர்தல் அதிகாரிகளின் கண் கண்காணிப்புடன் கூடிய கெடுபிடியா, அல்லது தேவையில்லாமல் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று அரசியல்வாதிகளின் கணக்கா ? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post கட்சி வேறுபாடு இல்லாமல் பூட்டியே கிடக்கும் தேர்தல் பணிமனைகள் appeared first on Dinakaran.

Tags : Karur ,Election Commission of India ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய...