×

கடத்தூரில் கன மழைக்கு 2 வீடுகளின் சுவர் இடிந்து சேதம்

கடத்தூர், மே 20: கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி, காவேரிபுரம் புதூர் பகுதியில் பழனியம்மாள், நதியா, சிங்காரம்(33) ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் கன மழை கொட்டியது. இதில், பழனியம்மாள் மற்றும் நதியா, சிங்காரம் ஆகியோரது வீட்டு சுவர்கள் இடிந்து சேதமானது. அப்போது, வீட்டில் இருந்தவர்கள் எழுந்து ஓட்டம் பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்த தகவலின்பேரில், கிராம நிர்வாக அலுவலர் குமார், ஆர்ஐ முருகன் உள்ளிட்டோர் நேற்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்த பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதகா உறுதியளித்தனர்.

The post கடத்தூரில் கன மழைக்கு 2 வீடுகளின் சுவர் இடிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Khatur ,Khattur ,Palaniammal ,Nadia ,Singaram ,Kadathur Union Dalanatham Oratchi, Kaveripuram Budur ,Palaniyammal ,Kadathur ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...